|   | 
        முன்னுரை 
         
          காளான் என்பது நிலத்திற்கு  மேலே வளரும் பூஞ்சாணின் திரள் பகுதி மற்றும் பூசண வித்துக்களைக் கொண்டது. இந்த பூஞ்சான்  வித்துத்திரள் பகுதி பொதுவாக உண்ணக்கூடிய பகுதியாகும். இவை வித்துக்களை இனப்பெருக்கம்  செய்து, மற்ற செடிகள் போலவே வித்துக்களை பரவச் செய்கின்றன. பூஞ்சாணின் மெல்லிய, நுண்ணிய  இழை போன்ற பகுதியான மைசீலியம், வேர்களிலிருந்து சத்துக்களைப் பெற்றுக் கொள்கின்றன.  இந்த வலைப்பகுதியான மைசீலியம் அதிக துரத்திற்கு பதவி மக்கிப் போகும் மரங்கள், மண்  அல்லது தகுந்த ஊடகத்திலிருந்து சத்துக்களைப் பெறுகின்றன. 
           
          பூஞ்சாணங்கள் பூசணங்கள்,  ஈஸ்ட்கள் போன்றவற்றுடன் ஒத்த தொடர்புடையவை. தாவர உலகத்தின் ஒரு பகுதியாக காளான் இருந்த  போதிலும், இதில் பச்சையம் (அ) வேர் அமைப்புக்கள் இல்லை. காளான்கள் அங்ககப் பொருட்களையே  ஊட்டச்சத்துக்காக சார்ந்து இருப்பதால், இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 
          
            
              - சாறுண்ணிகள் (இறந்த மரம் (அ) மரங்களின்  இறந்த திசுக்கள் (அ) சாணம்)
 
              - ஒட்டுண்ணிகள் (உயிருள்ள செடிகள் (அ)  விலங்குகளின் திசுக்களை தாக்கி உயிர் வாழ்வது) அல்லது
 
              -  வேர்சூழ்  பூசணம் (தாவரங்களுடன் இணை வாழ் தன்மை கொண்டது)
 
               
             
                   இந்த குழப்பத்தைத்  தவிர்க்கவே, விஞ்ஞானிகள் காளான் என்ற வார்த்தையை பொதுவாக உபயோகிக்கிறார்கள். இந்த  காளான் வகை அகாரிக்கேல்ஸ் (அ) போல்டேல்ஸ் என்ற பிரிவைச் சார்ந்தது.          | 
          |